முகப்பு
about us
services
research
enquiry
contact

௨ங்கள் வாழ்க்கை துணையை தேட

www.mothermatrimony.com


ஆராய்ச்சி௧ள் - எண்கணிதம்

அன்பானவர்களே,

ஜோதிடத்துறையில் எண்கணிதம் பற்றிய பலஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளேன். எல்லா ஆராய்ச்சியுமே முடிவில் அர்த்தமற்றதாகத்தான் உள்ளது. எண் கணிதம் ஆகமத்தில் இல்லாத ஒரு கணிதம். எண் என்பது மனிதனையும் பிற பொருள்களையும் தொடர்பு படுத்தும் ஓரு மீடியா அவ்வளவுதான். இது இடம், பொருள், காலத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடும். அப்படி மாறுபடுவது மனிதனை அளக்கும் ஓர் அளவுகோலாகுமா? சிந்திப்பீர்!!! தன் அளவுகோலின் அளவு தெரியாமலே அதைவைத்து பிறரை அளந்து கணக்கு சொல்வது, எவ்வளவு பெரிய முட்டாள் தனமான செயல். அமெரிக்காவில் காலை சூரியன் உதிக்கும் போது இந்தியாவில் இரவு 12மணி. சப்தநாடிகள் ஒடுங்கி சுகமாக தூங்கும்நேரம், அந்த நேரம் ஒரு நாளின் தொடக்கம் ஆகுமா? ஒரு நாளின் தொடக்கமாக இரவு 12 மணியை கணக்கிட்டு உள்ளனர். அமெரிக்காவில் காலை சுறுசுறுப்பாக உதயம் ஆகும் காலம் அவர்களின் நாள் ஆரம்பகாலம். நன்றாக புரிந்து கொள்ளுங்கள், ஓரு தாமரைமலர் மலர வேண்டுமானால் சூரியனின் உதய கதிர்வீச்சு அதன்மீது படவேண்டும் அப்படி பட்டால்தான் காலசக்கர சூழற்சியில் தாமரை பூ மலர்கின்றது. ஒரு நாள் ஆரம்பமும் ஆகின்றது. உதய கதிர்வீச்சு அதன்மீது படும் அந்த நேரம்தான் உதையாதி நாளிகை தொடங்குகின்றது. ஒரு பூவிற்கே உதையாதி நேரம்தான் அதன் பரிணாம தொடக்க காலமாக இருக்கும். இந்தியமக்கள் தூங்கும்போதா நாளின் தொடக்கம் ஆரம்பிக்கின்றது. GREENLAND(DNA)-ல் 23 டிகிரில் LONGITUDE ரேகையில் சூரிய ஒளிபடும் நேரம் உலகத்தின் உதய நேரமாக கணக்கிட்டு ஆங்கிலவருடத்தை கணக்கிட்டுள்ளனர். இந்த கணக்கீடு அமெரிக்கரின் வாழ்கை பரிணாம சக்கரத்திற்கு மட்டும் ஏற்றதாக உள்ளது. மற்ற எந்த நாட்டிற்கும் அது பொருந்தாது. ஆகையால் ஆங்கில தேதியை அடிபடையாகக் கொண்டு அமைக்கப்பட்ட எண்கணிதம் பொய் என்று நிருபணம் ஆகிறது அல்லவா.

இதற்கு ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன், சென்னையில் பிறந்த ஒருமனிதன் அமெரிக்காவிற்கு சென்று அங்கு குடியுரிமை பெற்று அங்குள்ள ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்கின்றார். அவர்களுக்கு ஒரு குழந்தை அமெரிக்காவில் வைத்து ஜெனிக்கின்றது. பத்தாவது மாதம் சென்னை வந்த 31-09-2009 தேதி இரவு 11.30 மணிக்கு பிறக்கின்றது. அந்தகுழந்தை மீண்டும் அமெரிக்காவிற்க்கு சென்று அங்கு வசிக்கின்றது. அந்த குழந்தையின் பிறந்த தேதி என்ன? அதன் எண் கணிதம் என்ன? அதேமாதிரி ஒரு அமெரிக்க நாட்டு பெண் நம் சென்னைக்கு வந்து இங்கு குடியுரிமை பெற்று இங்குள்ள ஒரு ஆணை திருமணம் செய்து சென்னையில் வைத்து குழந்தை ஜெனிக்கிறது. பத்தாவதுமாதம் கழித்து அமெரிக்காவிற்கு சென்று 01-10-2009 தேதி அதிகாலை 04.30 மணிக்கு குழந்தை அமெரிக்காவில் பிறக்கின்றது. இந்த குழந்தை அதன் பிறகு சென்னைக்கு வந்து வசிக்கின்றது. குழந்தையின் பிறந்த தேதி மற்றும் அதன் எண் கணிதம் என்ன? இதை ஒரு எண் கணித ஜோதிடர் சொல்லட்டும் பார்கலாம்!!! அமேரிக்கற்க்கு ஒரு சூரியன் சென்னை வாசியாகிய நமக்கு வேறு சூரியன் என்று இரண்டு சூரியன் இருந்தால் இது சரிதான். ஆனால் அப்படியில்லவே. இப்படி பல கேள்விகள் என்னிடம் உள்ளது. அதற்கு எந்தகேள்விக்கும் எண் கணித்த்தில் விடைகிடைக்கவில்லை. எண்கணித ஆராய்ச்சியின் மூலம் எண்கணித்த்தில் பிறந்த தேதி கணக்திடுவது தவறுதலாகயிருப்பதால் அந்த கணிதமும் தவறு. ஆகையால் அந்த கணிதத்தை கணக்கிட நான் விரும்பவில்லை. மற்றும் எண்கணிதத்தை விளம்பரபடுத்தும் எந்த ஜோதிடரும் ஒரு ஜோதிடர் அல்ல. இது தான் எண்கணிதத்தை பற்றிய ஆராய்ச்சியின் முடிவுமாகும்.

ஆனால் ஜோதிடத்தில் எனக்கு விடைகிடைத்த்து. ஜோதிட முறைப்படி ஒரு இடத்தில் சூரியன் உதிக்கும் அந்த உதயநாழிகை முதல் 60 நாழிகை கொண்டது ஒரு நாள். ஒரு இடத்தில் சூரியஒளி எப்பொழுது முதலில் பட ஆரம்பிக்கின்றதோ அந்த இடத்திற்க்கு (உலகத்தில் எந்த இடமானாலும்)அந்த நாள் அப்போதுதான் ஆரம்பம் ஆகிறது. அதுதான் உதையாதி நாழிகை. அதுதான் அந்த இடத்திற்கு லக்கணம். இது தான் சித்தர் ஜீவ நாடி ஜோதிடம். ஆனால், நம்முடைய முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தை விஞ்ஞான அடிப்படையில்தான் உருவாக்கியிருக்கிறார்கள் எனபதில் சந்தேகமில்லை. ஜோதிடம் முழுமையாக விஞ்ஞானபரிணாமத்தைப் பெறவேண்டுமானால், அது சம்பந்தமாக கேள்விகள் கேட்கப்படுவதும், பதில் சொல்லபடுவதுமாக இருக்க வேண்டும், திருப்தியான பதில் கிடைக்காத போது அவை தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் களச்சோதனைகளில் (Field Research) மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். ஜோதிடக்கலை ஓருவிஞ்ஞானம்தான்,ஆனால் அது யூகமான விஞ்ஞானம் (Speculative Science) என்பதை மறந்துவிடக்குடாது. நன்றி. மேல்படி எந்த சந்தேகங்களுக்கும் எம்மை தொடர்பு கொள்ளலாம்.

| | | | |
Copyright © Brahmaguru Astro Research Centre. All rights reserved.
Designed by Prism Technology