|
எதிர்காலம் பற்றித்தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆவல் எல்லோருக்கும் இருப்பது
இயற்கை. இன்றைய தினத்தைவிட நாளைய தினம் சிறப்பானதாக இருக்கும் எனகிற நம்பிக்கையில் தான்
மனிதன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறான். அந்த நம்பிக்கைக்கு ஒரு பற்றுக் கோடு அவனுக்கு தேவைபடுகிறது.
ஜாதகப் பலன்களில் அதை அடைய முயற்ச்சிக்கிறான். எனவே ஜோதிட சாஸ்திரத்தை வைத்து பலன் சொல்வது
ஒரு தொழிலாக வளர்ந்து விட்டது. ஜோதிடக்கலையே தொழிலாக மேற்கொள்ளாமல் அதை அறிவியல் பூர்வமான
ஆராய்ச்சியாக மேற்கொண்டு அதை மக்களுக்குப் பயன்படும் வகையில் நல்ல அறிவை எடுத்துச் சொல்லி அதை
அவர்கள் மூலம் அவர்கள் உள்ளேயே செயல்பட வைக்கும் ஒரு மீடியாவாக சேவை செய்கிறேம்.
செவ்வாய் தோஷம், சர்பதோஷம், களத்திரதோஷம், பாலாரிஷ்டதோஷம், கண்டாந்ததோஷம்,
ஆயுள்தோஷம், மற்றும் பெண் மூலம், பெண் ஆயில்யம், ஆண் சித்திரை, ஆண் உத்திரம், கேட்டை, மேலும்
கிரகபாபம், பாபசாமியம், திசாசந்தி, என்றெல்லாம் தோஷம் என்ற வார்த்தையை பயன்படுத்தி மக்களின்
வாழ்கையின் நோக்கத்தை திசை திருப்பி ஜோதிடர்களுக்கு சாதகமாக பரிகாரம் என்ற முறையை கையாண்டு
தான் காத்தல் கடவுளாக மாறி ஜோதிடவிஞ்ஞானத்தை கொச்சைபடுத்தும் செயலை எதிர்த்து ஒவ்வெரு
தோஷத்திர்க்கும் அறிவியல் பூர்வமான ஆதாரத்தை சிறிய உதாரணத்தின் மூலம் மக்களுக்கு எடுத்து விளக்கி
தோஷம் என்ற அச்சத்தை போக்கி அந்த தோஷத்தை யோகமாக மாற்ற மக்களுக்கு கற்றுக் கொடுப்பதே
எங்கள் நிறுவாகத்தின் சேவையான நோக்கம்.
இங்கு பரிகாரம் என்ற ஏமாற்று கிடையாது. உங்கள் வாழ்கை என்ற வண்டியை நீங்களே
ஓட்டிச்செல்ல வேண்டும். ஜோதிடம் என்பது ஓட்டுனர் பயிற்ச்சி பள்ளிமாதிரி, அவர்கள் அறிவுறையை மட்டும்
எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்கையை ஜோதிடர் ஓட்டிச்செல்லக்கூடாது. அப்படி பரிகாரம் என்ற
சொல்லை பயன்படுத்தி ஜோதிடர் ஓட்டிச்சென்றால் உங்கள் வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாமல் அர்த்தமற்றதாகிவிடும்.
எம் சேவையின் முக்கிய நோக்கம் உணர்த்த உணரும் உயிர் என்ற தத்துவத்தின் படி உலகம்,
உயிர், கடவுள், என்ற மூன்றிலும் உயிர் மட்டும் தான் உண்மை மற்றவை பரிணாமம். ஆகையால் ஜோதிடம்
என்ற விஞ்ஞானத்தை கருவியாக்க் கொண்டு உங்களின் உயிரை உணரவைப்பதுதான் எமது முக்கிய சேவை.
நன்றி வணக்கம்.
|